போகி படத்தில் நடிக்கும் அனுபமா பரமேஸ்வரனின் கதாபாத்திர போஸ்டர் வெளியீடு!

இயக்குநர் சம்பத் நந்தி இயக்கத்தில் சர்வானந்த் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் இணைந்து நடித்துள்ள ‘போகி’ என்ற தெலுங்குத் திரைப்படம் ஆகஸ்ட் 28ஆம் தேதி வெளியாக உள்ளது.

ஸ்ரீ சத்யா சாய் ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில், சர்வானந்த் கதாநாயகனாக நடித்துள்ள நிலையில், டிம்பிள் ஹையாதி மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

1960ஆம் ஆண்டை பின்னணியாகக் கொண்டு, தெலங்கானா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களுக்கிடையிலான எல்லைப் பிரச்சினைகளை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாகியுள்ளது என கூறப்படுகிறது. வரலாற்று மற்றும் சமூக பின்னணியுடன் கூடிய கதை அமைப்பில் உருவாகியுள்ள இப்படம், ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading