தமிழில் என்ட்ரி கொடுக்கும் பிரபல பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே?

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கும் அனன்யா பாண்டே, நடிகர் சங்கி பாண்டேயின் மகளாக 2019ஆம் ஆண்டு வெளியான ‘ஸ்டூடண்ட் ஆப் தி இயர் 2’ திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ‘காலி பீலி’, ‘கெஹ்ரையான்’, ‘லைகர்’, ‘சிடிஆர்எல்’ போன்ற பல திரைப்படங்களில் நடித்துப் பிரபலமானார்.

இந்தி சினிமாவில் தொடர்ந்து முன்னணியில் திகழ்ந்து வரும் அனன்யா பாண்டேவை தமிழ்த் திரைப்படங்களில் அறிமுகப்படுத்துவதற்காக தற்போது தீவிரமான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, ஒரு வாரிசு நடிகர் நடிக்கும் புதிய திரைப்படத்தில் அவர் இணையும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தப் படத்தின் கதையில் சில மாற்றங்கள் மற்றும் திருத்தங்களை கதாநாயகி தரப்பில் முன்வைத்துள்ளதாகவும், அவை விரைவில் ஒப்புதல் பெறும் நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தம் உறுதியாகும் பட்சத்தில், அனன்யா பாண்டே விரைவில் கோலிவுட் திரையுலகிலும் தனது அறிமுகத்தை பதிவு செய்ய இருப்பது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading