பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சனோன், தற்போது ஷாகித் கபூருடன் இணைந்து ‘காக்டெயில் 2’ திரைப்படத்தில் தனது நடிப்பை நிறைவு செய்துள்ளார். ஹோமி இயக்கியுள்ள இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கீர்த்தி சனோன், தனது வாழ்க்கை அணுகுமுறையைப் பற்றிய சில கருத்துகளை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, “என்னைப் பொறுத்தவரை எந்த பிரச்சினைக்கும் நான் ஒரே ஒரு அணுகுமுறையையே பின்பற்றுவேன். அது ‘இது சரி, அடுத்து என்ன செய்யலாம்?’ என்பதே. பிரச்சினைகளை நீண்ட நேரம் நினைத்து மனதில் வைத்துக் கொள்வதற்குப் பதிலாக, உடனடியாக அதைத் தாண்டி தீர்வை நோக்கி நகர வேண்டும்.
‘ஏன் இப்படியாகிவிட்டது?’ என்று சிந்தித்து கொண்டே இருந்தால், அந்த சிக்கலில் இருந்து வெளியே வர முடியாது. வாழ்க்கை என்பது பல புதிர்கள் நிறைந்த ஒரு பயணம். அந்த புதிர்களை எதிர்கொண்டு ஒன்றன்பின் ஒன்றாக தீர்த்து கொண்டு முன்னேறினால் தான் வாழ்க்கையில் முன்னேற்றம் காண முடியும்” என்று தெரிவித்துள்ளார்.
—
