மலையாளத் திரையுலகில் இந்த கோடைக்காலத்தில் ரசிகர்களுக்கு சிறப்பு விருந்தாக ‘பேட்ரியாட்’ என்ற பலநட்சத்திர திரைப்படம் வெளியாக உள்ளது. மம்முட்டி, மோகன்லால், குஞ்சாக்கோ போபன், பஹத் பாசில் ஆகிய நான்கு முன்னணி நடிகர்கள் இதில் நடித்துள்ளனர். நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்தை இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கியுள்ளார்.
இந்த திரைப்படம் வரும் மே 1ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு நடைபெறும் விளம்பர நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக, படத்தின் நான்கு நடிகர்களும் ஒன்றாக இணைந்து ‘லெஜெண்ட்ஸ் ஹேங்கவுட்’ என்ற பெயரில் சுவாரஸ்யமான உரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.
அதற்கான முன்னோட்டத்தில், “இந்தப் படத்தில் நான்கு ஹீரோக்கள் இல்லை, இரண்டு பேர் மட்டுமே உள்ளனர்” என்று மம்முட்டி கூற, மற்றவர்கள் யாரை குறிக்கிறார் என ஆச்சரியப்படுகின்றனர். அதேபோல், “சிறந்த நடிகர் யார் – மம்முட்டியா, மோகன்லாலா?” என அவர் கேள்வி எழுப்பியதும் அனைவரும் சிரிப்பிலும் குழப்பத்திலும் ஆழ்கின்றனர். இந்த சுவாரஸ்யமான நிகழ்ச்சி ஏப்ரல் 23ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாகிறது.
—
