கவனம் பெறும் அஜித் – ஷாலினி நடித்த ‘அமர்க்களம்’ படத்தின் ரீ ரிலீஸ் டிரெய்லர்!

அஜித்குமார் நடித்த ‘அமர்க்களம்’ திரைப்படம் 1990ஆம் ஆண்டு வெளியாகி, தமிழ் சினிமாவில் முக்கியமான இடத்தைப் பெற்றது. காதல் மற்றும் ஆக்ஷன் கலந்த கதைக்களத்துடன் உருவான இந்த திரைப்படம், அஜித்குமாரின் ரசிகர்களால் மிகவும் விரும்பப்படும் படங்களுள் ஒன்றாக திகழ்கிறது. மேலும், இந்த திரைப்படம் அவரது தனிப்பட்ட வாழ்க்கையிலும், திரை வாழ்க்கையிலும் முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் சரண் இயக்கிய இந்த திரைப்படத்தில், அஜித்குமாருக்கு ஜோடியாக ஷாலினி நடித்துள்ளார். மேலும் ரகுவரன், ராதிகா சரத்குமார், நாசர், அம்பிகா, வினு சக்ரவர்த்தி, சார்லி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு பரத்வாஜ் இசையமைத்துள்ளார்; கவிஞர் வைரமுத்து எழுதிய பாடல்கள் அனைத்தும் பெரும் வரவேற்பைப் பெற்று, திரைப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தன.

தற்போது, அஜித்குமார் மற்றும் ஷாலினி திருமண நாளை முன்னிட்டு, அவர்கள் இணைந்து நடித்த ‘அமர்க்களம்’ திரைப்படம் டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்டு, வரும் 24ஆம் தேதி மீண்டும் திரையிடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, இந்த திரைப்படத்தின் மறுவெளியீட்டு முன்னோட்டமும் வெளியிடப்பட்டு, ரசிகர்களிடையே அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading