விக்ரம் 63 படத்தின் கதாநாயகி இவர்தானா? வெளியான புது தகவல்!

விக்ரம் நடிப்பில் உருவாகும் 63வது திரைப்படத்தை, ‘இருமுகன்’ படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்குகிறார். இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்தப் படத்தில் நாயகியாக யார் நடிக்கிறார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்தப் படத்தில் கதாநாயகியாக தயாரிப்பாளர் சிபு தமின் அவர்களின் மகளான ரியா சிபு நடிக்கிறார் என்று புதிய தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் ‘சர்வம் மாயா’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் கவனம் பெற்றவர் ரியா சிபு. இவரது தந்தை சிபு தமின், விக்ரம்வை வைத்து ‘இருமுகன்’, ‘சாமி 2’, ‘வீர தீர சூரன்’ போன்ற படங்களை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading