ஒருவேளை எஸ்பிபி இருந்திருந்தால் என் 100வது படத்தில் நடிக்க வைத்திருப்பேன் – இயக்குனர் பிரியதர்ஷன் எமோஷனல் டாக்!

மலையாள திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பிரியதர்ஷன் தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் தொடர்ந்து திரைப்படங்களை இயக்கி வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் அவரது இயக்கத்தில் ஹிந்தியில் ‘பூத் பங்களா’ திரைப்படம் வெளியாகியுள்ளது. மேலும், விரைவில் தனது 100வது திரைப்படமாக மலையாளத்தில் மோகன்லால்வை நாயகனாக கொண்டு ஒரு படத்தை இயக்க உள்ளார். தனது முதல் படத்திலேயே மோகன்லாலை நாயகனாக வைத்து இயக்கிய பிரியதர்ஷன், தனது நூறாவது படத்திலும் அவரையே கதாநாயகனாக தேர்வு செய்திருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படம் முழுக்க முழுக்க இசையை மையமாகக் கொண்டு உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. இதில் சுமார் 12 பாடல்கள் இடம்பெறவுள்ளதாகவும் பிரியதர்ஷன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், இந்தப் படத்தில் தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரும் கர்நாடக இசைக் கலைஞர்களாக இருப்பார்கள். “ஒருவேளை எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்கள் உயிருடன் இருந்திருந்தால், தந்தை கதாபாத்திரத்தில் அவரையே நடிக்க அழைத்திருப்பேன்” என தெரிவித்துள்ளார். மேலும், மோகன்லால் முன்பும் சில படங்களில் பாடியிருந்தாலும், இந்தப் படத்தில் அவரை பாட வைக்க திட்டமில்லை என்றும் கூறினார். காரணம், இந்த படம் முழுமையாக இசையை மையமாகக் கொண்டு உருவாகும் தன்மை கொண்டதாக இருப்பதாக அவர் விளக்கமளித்தார்.

தந்தை-மகன் உறவை மையமாகக் கொண்ட இந்தக் கதையில், எஸ்.பி.பி இருந்திருந்தால் தந்தை வேடத்தில் அவரை நடிக்க வைத்திருப்பேன் என்று பிரியதர்ஷன் கூறியிருப்பதால், அந்த தந்தை கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிக்கிறாரா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading