‘கான்ஞ்சுரிங் கண்ணப்பன்’ பட இயக்குனருடன் கைகோர்கிறாரா சந்தானம்?

2023ஆம் ஆண்டு சதீஷ் மற்றும் ஏ.ஜி.எஸ் நிறுவனம் இணைந்து வெளியிட்ட திரைப்படம் ‘கான்ஞ்சுரிங் கண்ணப்பன்’. இந்தப் படத்தை இயக்குனர் செல்லின் எக்ஸ் சேவியர் இயக்கியிருந்தார். ஹாரர் மற்றும் பேண்டஸி கலந்த நகைச்சுவை திரைப்படமாக உருவான இந்த படம், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றியை பெற்றது.

இந்நிலையில், மீண்டும் ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், ‘கான்ஞ்சுரிங் கண்ணப்பன்’ படத்தின் இயக்குனர் செல்லின் எக்ஸ் சேவியர் புதிய திரைப்படம் ஒன்றை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் புதிய படத்தில் கதாநாயகனாக நடிகர் சந்தானம் நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது. மேலும், இந்தப் படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதிக்குள் துவங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading