மிகப்பெரிய தொகைக்கு விலைப்போன சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘ஜெயிலர் 2’ ஓடிடி உரிமம்?

‘ஜெயிலர்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்த் மற்றும் நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் தற்போது ‘ஜெயிலர் 2’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தை Sun Pictures நிறுவனம் தயாரித்து வர, அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், மிதுன் சக்கரவர்த்தி, சந்தானம், சுராஜ் வெஞ்சரமூடு, யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் வரும் ஜூன் மாதத்தில் திரைக்கு வரக்கூடும் என தகவல்கள் வெளியாகின்றன. மேலும், இப்படத்தில் ஷாரூக் கான் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் தற்போது தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் நடிக்கிறார் என்ற தகவலும் பரவி வருகிறது.

இதனுடன், ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் ஓ.டி.டி உரிமத்தை அமேசான் பிரைம் ரூ.160 கோடி மதிப்பில் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு ‘ஜெயிலர்’ முதல் பாகத்தின் ஓ.டி.டி உரிமத்தை அதே நிறுவனம் ரூ.100 கோடிக்கு வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading