அமர்க்களத்துடன் ரீ ரிலீஸாகும் அஜித்தின் ‘பில்லா’ !

சரண் இயக்கத்தில் அஜித் நடித்த அமர்க்களம் படம், ஏப்ரல் 24ம் தேதி ரிலீஸ் ஆகிறது. கேப்டன் பிரபாகரன், அமைதிப்படை படங்களை ரீ ரிலீஸ் செய்த கார்த்திக் என்பவர் அதை வெளியிடுகிறார். ஏப்ரல் 24ம் தேதி அஜித், ஷாலினி திருமண நாள் என்பதால் அந்த தேதியில் அமர்க்களத்தை வெளியிடுகின்றனர்.அதேப்போல் மே 1ம் தேதி அஜித் பிறந்தநாள் என்பதால், அன்றைய தேதியில் பில்லா படமும் ரீ ரிலீஸ் ஆகிறது. விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித், நயன்தாரா, நமீதா, பிரபு, சந்தானம் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் வரவேற்பை பெற்றது. குறிப்பாக யுவனின் இசையில் வெளியான பாடல்கள் மற்றும் பிஜிஎம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading