இயக்குனர் சேரன் சமீபத்தில் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், வாக்கு என்பது நம் உரிமை.. அதை விற்கக்கூடாது.. 5000 க்கு நீங்கள் விற்கும் ஓட்டால் 5 வருட நல்லாட்சியை இழக்கிறீர்கள்.. அரசால் எல்லோருக்கும் கிடைக்கும் எல்லா வசதிகளையும் முடக்குகிறீர்கள்.. எதிர் கேள்வி கேட்க ஆளில்லாத நிலையால் ஊழலையும் லஞ்சத்தையும் தலைவிரித்து ஆட வழி அமைத்து கொடுக்குறீர்கள்.. ஆகையால் வாக்களர்களே… உங்கள் உரிமையை கை உயர்த்தி இப்படித்தான் இனி வாக்காளிப்போம் என உரக்க கூறி உங்களிடம் வாக்குக்காக பணம் தர வரும் அரசியல் பிரமுகர்களை விரட்டுங்கள்… மாற்றம் கண்டிப்பாக நிகழும்… அது நீங்கள் விரும்பும் ஆட்சியாக மலரும்…என மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.
Add a Comment
