LIK படத்தின் முதல் வாரத்தின் வசூல் என்ன?

இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவான திரைப்படம் ‘LIK’ (லவ் இன்ஷூரன்ஸ் கொம்பனி). இந்தப் படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இந்தப் படத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் எஸ்.ஜே. சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி இந்தப் படம் உலகளவில் வெளியானது.தமிழ்நாட்டில் ‘LIK’ படத்தின் முதல் நாள் வசூல் 7.2 கோடி என பட தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு இருந்தது. இந்த நிலையில், LIK திரைப்படம் வெளியாகி முதல் வாரத்தில் மட்டும் ரூ. 54.3 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு மற்றொரு போஸ்டர் வெளியிட்டுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading