பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், ‘நூறு சாமி’ திரைப்படத்தை பார்த்துவிட்டு தனது பாராட்டை தெரிவித்துள்ளார். அதாவது, “மனதைத் தொடும் வகையிலான, உணர்வுபூர்வமான கதை இது; நீண்ட காலத்திற்கு நம் நினைவில் நிலைத்திருக்கக்கூடியது. இது ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருப்பதால், இன்னும் சிறப்பானதாக அமைந்தது. இதை நான் மிகவும் ரசித்துப்பார்த்தேன்; நிச்சயம் பார்வையாளர்களும் இதனுடன் ஒன்றிப்போய் ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்.” என்று தெரிவித்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸின் இந்த பாராட்டுக்கு நன்றி தெரிவித்து, ‘நூறு சாமி’ படக்குழுவும் சமூக வலைதளத்தில் சிறப்பு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
Add a Comment
