பிரபல இயக்குநர் மணிரத்னம், ‘தக் லைஃப்’ திரைப்படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த திரைப்படத்தை நடிகர் விஜய் சேதுபதியை மையமாகக் கொண்டு இயக்கத் தயாராக உள்ளார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடிக்கிறார். விஜய் சேதுபதியுடன் சாய் பல்லவி இணைந்து நடிக்கும் இது முதல் திரைப்படமாகும். இந்த படத்திற்கு தற்போது ‘புரொடக்ஷன் நம்பர் 23’ என்ற தற்காலிக பெயர் வழங்கப்பட்டுள்ளது.
லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்க உள்ளார். இப்படத்தின் கதை, மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர்கள் பற்றிய விரிவான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
இதற்கிடையில், ‘புரொடக்ஷன் நம்பர் 23’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் 14ஆம் தேதி தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு முன்னதாக, இந்த மாத இறுதியில் இப்படத்திற்கான விளம்பரப் படப்பிடிப்பு (ப்ரோமோ ஷூட்) நடைபெறவுள்ளது.இதனைத் தொடர்ந்து, வரவிருக்கும் நாட்களில் இந்த திரைப்படம் தொடர்பான புதிய தகவல்கள் மற்றும் அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
