பாலிவுட்டில் அவ்வப்போது மிகப்பெரிய ஹிட்டான படங்களின் மூன்றாம் பாகங்கள், அதையும் தாண்டி நான்காம் பாகங்கள் வரை எடுக்கப்படுவது உண்டு. அந்த வகையில் பிரபல இயக்குனர் ரோஹித் ஷெட்டி டைரக்ஷனில் அஜய் தேவ்கன் கூட்டணியில் கடந்த 2006 முதல் 2017 வரையிலான 17 வருடங்களில் ‘கோல்மால்’ திரைப்படம் அடுத்தடுத்து நான்கு பாகங்களாக வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் ஐந்தாம் பாகம் தயாராக இருக்கிறது என்கிற தகவல் சமீபத்தில் வெளியானது. ஆனால் ஆச்சரியமாக இந்த படத்தில் அஜய் தேவனுக்கு ஜோடியும் இல்லை. அதனால் அவருக்கு ரொமான்ஸும் இல்லை என்று தெரியவந்துள்ளது. இந்த படத்தில் பிரியாமணி நடித்தாலும் கூட அவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மட்டுமே நடிக்க இருக்கிறாராம்.
Add a Comment
