ஹிந்தி திரையுலகில் இயக்குநர் ஆதித்யா தர் இயக்கத்தில் நடிகர் ரன்வீர் சிங் நடித்த ‘துரந்தர்’ திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளன. இதனைத் தொடர்ந்து, அவர் அடுத்ததாக இயக்குநர் ஹன்சல் மேத்தா இயக்கும் ‘பிரலே’ என்ற சோம்பி திரில்லர் திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.
இந்தப் படத்தில் ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். இந்திய சினிமாவில் இதுவரை முயற்சிக்கப்படாத வித்தியாசமான கதைக்களத்தில் இந்தப் படம் உருவாகிறது என்றும் கூறப்படுகிறது. மேலும், சுமார் 300 கோடி ரூபாய் செலவில் இந்தப் படத்தை ரன்வீர் சிங் தானே தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படம் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் ரன்வீர் சிங் கூறுகையில், “பிரலே என்பது ஒரு முழுமையான அசல் கதை. இது போர்ச்சுகீசிய எழுத்தாளரின் ‘பிளைண்ட்னஸ்’ நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகிறது என்ற தகவல் உண்மையல்ல” என்று தெளிவுபடுத்தினார். மேலும், பேரழிவுகளால் சிதைந்த நகரத்தை மையமாகக் கொண்ட சோம்பி திரில்லர் கதையாக இந்தப் படம் உருவாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
