‘டிமான்ட்டி காலனி – 3′ படத்தின் படப்பிடிப்பு நிறைவு! #DemonteColony3

அருள்நிதி நடித்த ‘டிமான்ட்டி காலனி’ திரைப்படம் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த திரைப்படத்தை இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கியிருந்தார். அச்சமூட்டும் திகில் கலந்த திரில்லர் கதைக்களத்தில் உருவான இந்த படம், அதன் விறுவிறுப்பான காட்சிகளாலும் சஸ்பென்ஸ் நிறைந்த திரைக்கதையாலும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

அதனைத் தொடர்ந்து, சுமார் பத்து ஆண்டுகளுக்கு பிறகு ‘டிமான்ட்டி காலனி’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வெளியிடப்பட்டது. அஜய் ஞானமுத்து இயக்கிய ‘டிமான்ட்டி காலனி 2’ திரைப்படத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், விஜே அர்ச்சனா, மீனாட்சி கோவிந்தராஜன், முத்துக்குமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த இரண்டாம் பாகமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றியைத் தொடர்ந்து கொண்டது.

இதைத் தொடர்ந்து தற்போது ‘டிமான்ட்டி காலனி’ திரைப்படத்தின் மூன்றாம் பாகமும் உருவாகி வருகிறது. இந்த படம் தற்போது வேகமாக படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், கோடை விடுமுறை காலத்தில் வெளியிடப்பட உள்ளது என படக்குழு அறிவித்துள்ளது. மேலும், இப்படத்தின் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும் காணொளி சமீபத்தில் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில், ‘டிமான்ட்டி காலனி 3’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதனுடன் தொடர்புடைய ஒரு காணொளியும் வெளியிடப்பட்டுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading