மிஸ்டர் எக்ஸ் திரைப்படத்தை, மனு ஆனந்த் இயக்கியுள்ளார். எப்.ஐ.ஆர் திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இவர், தனது அடுத்த படைப்பாக இந்த ஆக்சன் திரில்லர் படத்தை உருவாக்கியுள்ளார். இப்படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் கவுதம் ராம் கார்த்திக் நடித்துள்ளார். மேலும், சரத்குமார், மஞ்சு வாரியர், அனேகா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இசையமைப்பாளராக திபு நிபுணன் தாமஸ் பணியாற்றியுள்ளதுடன், தன்வீர் மிர் ஒளிப்பதிவை கவனித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய பல மொழிகளில் இப்படம் வெளியிடப்பட உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த ஆண்டு ஜூலை மாதத்திலேயே நிறைவடைந்தன. ஸ்பை திரில்லர் கதை அமைப்பை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது, ஆர்யா நடித்துள்ள மிஸ்டர் எக்ஸ் திரைப்படம் இந்த ஏப்ரல் மாதத்திற்குள் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
