அர்ஜூன் தாஸின் ‘Once More’ படத்தின் ‘இந்திரா’ பாடல் வெளியாகி வைரல்!

தமிழ் திரையுலகில் ‘மாஸ்டர்’, ‘கைதி’, ‘விக்ரம்’ போன்ற படங்களில் நடித்ததால் பிரபலமான அர்ஜுன் தாஸ், தொடர்ந்து ‘அநீதி’, ‘ரசவாதி’, ‘போர்’ போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். தற்போது, அர்ஜுன் தாஸ் அதிதி ஷங்கர் உடன் இணைந்து புதிய படம் ‘ஒன்ஸ் மோர்’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் நவீன கால இளைஞர் ஒருவரின் காதல் அனுபவத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.

‘குட் நைட்’ மற்றும் ‘லவ்வர்’ படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. ரொமான்டிக் காதல் கதைக்களத்தில் உருவாகிய இந்த படத்தை அறிமுக இயக்குனர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கியுள்ளார். மலையாளத்தில் வெளியான ‘ஹிருதயம்’ படத்தின் இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வஹாப் ஒன்ஸ் மோர் படத்தின் பாடல்களை உருவாக்கியுள்ளார். இந்த பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

‘ஒன்ஸ் மோர்’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இப்படத்தில் நடிகை சோனா ஒலிக்கல் ‘இந்திரா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் ‘வெயில்’ (2022), ‘கடகன்’ (2024), ‘ஓ மேரி லைலா’ (2022) போன்ற மலையாள படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, ‘ஒன்ஸ் மோர்’ படத்தில் இடம்பெற்ற ‘இந்திரா’ பாடல் படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading