டி.டி. பாலச்சந்திரன் இயக்கத்தில், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘லெனின் பாண்டியன்’. இதில் நடிகர் தர்ஷன் கணேசன், சிவாஜி கணேசனின் மகன், நாயகனாக அறிமுகமாகிறார். படத்தில் இசையமைப்பாளர் கங்கை அமரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா. 32 ஆண்டுகளுக்குப் பிறகு, தயாரிப்பாளர் டி.ஜி. தியாகராஜன் உடன் இணைந்து பணியாற்றும் படம் இதுவே. இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகரித்து உள்ளது. கிராமப்புற பின்னணியைக் கொண்ட ஆக்ஷன் கலந்த கதையில், தர்ஷன் காவல் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை ரோஜா இந்த படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி செய்து உள்ளார்.
‘லெனின் பாண்டியன்’ படக்குழு, நடித்து வரும் நடிகர்களின் கதாபாத்திரங்களை வெளிப்படுத்தி போஸ்டர் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், நடிகை ஸ்ரிதா ராவ் கதாநாயகியாக நடிக்கிறார் என்றும், அவரது கதாபாத்திரத்தின் பெயர் பிரியா என்றும் படக்குழு அறிவித்துள்ளது.
