இசை இன்னும் என்னுள் உயிருடன் இருக்கிறது… மனம் திறந்த‌ இசையமைப்பாளர் மணிசர்மா!

தெலுங்கு மட்டுமின்றி தமிழிலும் முன்னணி இசையமைப்பாளராக விளங்கிய மணிசர்மா, குறிப்பாக விஜய் நடித்த ‘ஷாஜகான்’, ‘யூத்’, ‘போக்கிரி’ போன்ற படங்களுக்கு பல வெற்றிப் பாடல்களை வழங்கியுள்ளார். சமீப காலமாக பட வாய்ப்புகள் குறைந்திருந்த நிலையில், விரைவில் வெளியாக உள்ள ‘சென்னை லவ் ஸ்டோரி’ திரைப்படத்திற்கு இசையமைத்ததன் மூலம் மீண்டும் திரையுலகில் தன்னை நிலைநிறுத்தியுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசியதாவது: “இப்படத்தின் இயக்குநர் சாய் ராஜேஷ் என் வீட்டிற்கு வந்து இந்தக் கதையை கூறியபோது, ஏன் என்னிடம் இதை பகிர்கிறார், நான் இதில் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறார் என்ற சந்தேகத்துடன் கேட்டேன். ஆனால் அவர், இந்தப் படத்திற்கு நீங்கள் தான் இசையமைக்க வேண்டும் என்று உறுதியாக கூறினார்.

அப்போது நான், என் ஆர்மோனியம் எங்கு இருக்கிறது என்பதே எனக்கு தெரியாது என்று சொன்னேன். உடனே அவர் என் வீட்டில் தேடி ஆர்மோனியத்தை கண்டுபிடித்து, அதை சுத்தம் செய்து எனக்கு கொடுத்தார். அதில் ஒரு டியூன் அமைத்தபோது, இசை இன்னும் என்னுள் உயிருடன் இருக்கிறது என்பதை உணர்ந்தேன். அதன் பிறகு, தொடர்ந்து இந்தப் படத்திற்காக பல அழகான இசைத்துணிகளை உருவாக்கினேன்,” என்று தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading