இசையுலகில் தனது காந்த குரல் முலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் 40,000 பாடல்களுக்கு மேல் பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். ஆறுமுறை தேசிய விருது, எண்ணிலடங்கா மாநில விருதுகள் பெற்று சாதனை படைத்துள்ளார். இவரது கலை சேவையை பாராட்டி தற்போது பாலக்காட்டில், மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் உள்ள பட்டத்திரிப்பாடு நினைவகத்தில், மலையாள திரைப்பட பின்னணி பாடகர்கள் சங்கமான சமம் மற்றும் ஸ்வரலயா கலை அமைப்பின் முயற்சியில், 10 அடி திருவுருவச் சிலை தற்போது திறக்கப்பட்டுள்ளது.
Add a Comment
