நல்ல கதைகள் கிடைத்தால் கண்டிப்பாக மீண்டும் தமிழில் தொடர்ந்து நடிப்பேன் – நடிகை கயாடு லோஹர்!

டொவினோ தாமஸ் ஜோடியாக ‘பள்ளிச்சட்டம்பி’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள கயாடு லோஹர்  இந்தப் படத்தின் நிகழ்ச்சிக்காக சென்னை வந்திருந்தபோது தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். 

அவர் பேசியதாவது, “இது நான் நடித்திருக்கும் மூன்றாவது மலையாள திரைப்படமாகும். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தின் மூலம் மீண்டும் மலையாள சினிமாவில் நடித்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த திரைப்படத்தில் எனக்கு கிடைத்த கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமானது. அது எனது மனதிற்கு மிகவும் நெருக்கமான கதாபாத்திரமாகும், அதேபோல் இந்தப் படமும் எனக்கு மிகவும் ஸ்பெஷலானது.

இந்த மாதிரியான கதாபாத்திரத்தை எனக்கு வழங்கிய இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் நான் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன். இந்தப் படத்தில் எனது நடிப்புத் திறனை வெளிப்படுத்த பல வாய்ப்புகள் கிடைத்தது. இந்த படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உறுதியாக உள்ளது.

நாங்கள் அனைவரும் குழுவாக இணைந்து கடுமையாக உழைத்து, இந்தப் படத்தை ஒரு குடும்பத்துடன் பார்க்கக்கூடிய என்டர்டெய்னராக உருவாக்கியுள்ளோம். டொவினோ தாமஸ் மிகவும் திறமையான சக நடிகர், அவருடன் இணைந்து பணியாற்றியது எனக்கு மகிழ்ச்சி அளித்தது. எனக்கு தமிழ் சிறிதளவு தெரியும். நல்ல கதைகள் கிடைத்தால் கண்டிப்பாக மீண்டும் தமிழிலும் நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading