நடிகர் விக்ரமின் 63வது திரைப்படத்தை இயக்குநர் போடி கே. ராஜ்குமார் இயக்க உள்ளார். எனினும், இந்தப் படத்தின் படப்பிடிப்பு இதுவரை தொடங்கப்படவில்லை.
இந்நிலையில், விக்ரமின் 64வது திரைப்படத்தை ‘இருமுகன்’ படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார் என்றும், சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்றும் கூறப்படுகிறது.
மேலும், இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகிற ஏப்ரல் 17ஆம் தேதி, நடிகர் விக்ரமின் 60வது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
