மறைந்த நடிகர் சிவாஜி அவர்களின் பேரனும், சிவாஜி அவர்களின் மகன் ராம்குமார் அவர்களின் மகனுமான தர்ஷன் கணேசன் நடித்துள்ள புதிய திரைப்படம் ‘லெனின் பாண்டியன்’. இப்படம் டிடி பாலச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ளலு.
இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் கங்கை அமரன் மற்றும் நடிகை ரோஜா நடித்துள்ளனர். டிடி பாலச்சந்திரன் இயக்கத்தில் உருவாகிய இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. குறிப்பாக ஆடு மேய்க்கும் ஒரு பெரியவருக்கு, துப்பாக்கி ஏந்திய போலீஸ்காரர் பாதுகாப்பு தரும் கதை. பெரியவராக கங்கை அமரனும், போலீஸ்காரராக தர்ஷன் கணேசனும் நடிக்கிறார்கள்.
இதற்கு இசையமைப்பாளராக இளையராஜா பணியாற்றவுள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
