டெல்லி சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் பாலகிருஷ்ணா செய்த நெகிழ்ச்சி செயல்!

2026ம் வருடத்திற்கான டில்லி சர்வதேச திரைப்பட திருவிழா டில்லியில் துவங்கியது. இந்த நிகழ்வில் நடிகர் பாலகிருஷ்ணா, ஷர்மிளா தாகூர் மற்றும் மறைந்த பாலிவுட் நடிகர் தர்மேந்திரா ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக நடிகர் பாலகிருஷ்ணாவும் வந்திருந்தார். தனது கணவரின் மரணத்துக்கு பிறகு அவர் சார்பாக இந்த விருதை பெற்றுக் கொள்வதற்காக அவரது மனைவியும் பாலிவுட் நடிகையுமான ஹேமமாலினியும் இந்த நிகழ்வுக்கு வருகை தந்தார். அப்போது ஹேமமாலினி பாதங்களை தொட்டு வணங்கினார் பாலகிருஷ்ணா. அவரது இந்த செயல் அங்கிருந்த பலரையும் ஆச்சர்யப்படவும் நெகிழவும் வைத்தது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு தெலுங்கில் வெளியான கவுதமி புத்திர சடகர்னி படத்தில் பாலகிருஷ்ணாவின் அம்மாவாக ஹேமமாலினி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading