பொள்ளாச்சியில் உள்ள திரையரங்கில் ஜி.வி.பிரகாஷ் தனது நடிப்பில் இன்று வெளியான ‘ஹாப்பி ராஜ்’ படத்தை ரசிகர்களுடன் பார்த்துவிட்டு, பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது பேசிய ஜி.வி.பிரகாஷ், “எங்கள் படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. திருப்பூர், மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று ரசிகர்களை சந்திக்க உள்ளோம். படத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி” என்று தெரிவித்தார். தொடர்ந்து எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் குறித்து பேசிய அவர், “தேர்தலில் இளைஞர்கள் அனைவரும் வாக்கு செலுத்துங்கள். வாக்கு சதவீதத்தை நாம் அதிகரிக்க வேண்டும். உங்கள் வாக்கின் முக்கியத்துவத்தை தேர்தலில் காட்டுங்கள்” என்று தெரிவித்தார்.
Add a Comment
