துரந்தர் படத்தின் முதல் பாகம் 3 மணி நேரம் 25 நிமிடங்கள் ஓடும் விதமாகவும் இரண்டாம் பாகம் 3 மணி நேரம் 49 நிமிடங்கள் ஓடும் விதமாகவும் வெளியாகி உள்ளது. அதே சமயம் இந்தப் படத்திற்காக கிட்டத்தட்ட பத்து மணி நேரம் ஓடும் விதமாக காட்சிகள் எடுக்கப்பட்டு அவற்றில் கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் காட்சிகள் வெட்டி தனியாக எடுத்து வைக்கப்பட்டு மீதி படம் தான் இரண்டு பாகங்களாக வெளியாகி உள்ளதாம். துரந்தர் இரண்டாம் பாகம் வெற்றிகரமாக ஓடி தனது ஓட்டத்தை நிறைவு செய்த பிறகு கையில் மீதி இருக்கும் இரண்டரை மணி நேர காட்சிகளையும் இந்த இரண்டு பாகங்களுடன் பக்காவாக இணைத்து கிட்டத்தட்ட 20 எபிசோடுகள் கொண்ட ஒரு வெப் சீரிஸ் ஆக வெளியிடும் திட்டத்தில் தயாரிப்பு நிறுவனம் இருப்பதாகவும் தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
Add a Comment
