ஹிந்தி நடிகர் சஞ்சய் தத் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை நேற்று சந்தித்துப் பேசினார். இது குறித்து ஆந்திர முதல்வர் அலுவலகம் சார்பில், பாலிவுட் நட்சத்திரம் சஞ்சய் தத் இன்று முதல்வர் சந்திரபாபு நாயுடுவை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இருவருக்கும் இடையே ஆந்திரப் பிரதேசத்தில் திரைப்படத் தொழிலின் வளர்ச்சி குறித்து விவாதம் நடைபெற்றது. சஞ்சய் தத், மாநிலத்தில் திரைப்படத் துறை சார்ந்த அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை அமைக்கும் தனது ஆர்வத்தை விளக்கினார். இருவருக்கும் இடையே, அரசின் திட்டங்கள் குறித்து விவாதம் நடைபெற்றது. ஆந்திரப் பிரதேசத்தை திரைப்படப் படப்பிடிப்பு மையமாக மாற்றுவது மற்றும் அதில் கிடைக்கும் வாய்ப்புகள் பற்றியும், அரசு திரைப்பட ஸ்டூடியோக்கள் மற்றும் பிற அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது பற்றியும் முதல்வர் தெரிவித்தார்,” என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
Add a Comment
