புதிய கார்-ஐ வாங்கிய ‘பறந்து போ’ பட நடிகை கிரேஸ் ஆண்டனி!

கேரளத்தைச் சேர்ந்த கிரேஸ் ஆண்டனி மலையாளத்தில் ஹேப்பி வெட்டிங் எனும் படத்தில் அறிமுகமானார். பகத் பாசில் மனைவியாக கும்பலாங்கி நைட்ஸ் படத்தில் நடித்து கவனம் ஈர்த்தார். அதனை தொடர்ந்து இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியான பறந்து போ திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. இப்படத்தில் இவருடைய நடிப்பை அனைவரும் பாராட்டினார்கள்.இவர் சமீபத்தில் தனது நீண்டநாள் காதலரான அபி டாம் சிரியாக்கை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் இணைந்து சுமார் ரூ.80 லட்சம் மதிப்பிலான பி.எம்.டபிள்யூ காரை வாங்கியுள்ளனர். இது தொடர்பான பதிவை நடிகை கிரேஸ் ஆண்டனி தனது சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading