சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், ராதிகா சரத்குமார் நடித்துள்ள ‘தாய் கிழவி’ திரைப்படம் கடந்த 27ஆம் தேதி வெளியானது. இந்த திரைப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்திருந்தார். இதில் சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், இளவரசு, ஜார்ஜ் மரியன், முத்துக்குமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். இப்படத்தில் ராதிகா சரத்குமார் வயதான தோற்றத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சமூகத்துக்கு தேவையான நல்ல கருத்துகளை நகைச்சுவை வடிவில் வெளிப்படுத்தும் இந்த திரைப்படம் மக்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்நிலையில், ‘தாய் கிழவி’ திரைப்படம் 25 நாட்களில் ரூ.75 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
