‘தேவூல் பந்த் 2’ பட லாபத்தை விவசாயிகளின் குழந்தைகளுக்கு நன்கொடை அளித்த படக்குழு!

மராத்தியில் உருவான ‘தேவூல் பந்த் 2’ திரைப்படத்தின் டிஜிட்டல் பணிகளுக்கான கட்டணம் ரூ.42 லட்சமாக உயர்ந்த நிலையில், படக்குழு சந்தித்த சிரமத்தை அறிந்த ஷாருக்கான் அந்தத் தொகையை முழுமையாக தள்ளுபடி செய்து என்ஓசி வழங்க உத்தரவிட்டார். பின்னர் இப்படம் சுமார் ரூ.100 கோடி வசூலை ஈட்டிய நிலையில், கிடைத்த லாபம் முழுவதையும் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குழந்தைகளின் கல்வி மற்றும் நலனுக்காக படக்குழு வழங்கியுள்ளது. வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 250 குழந்தைகளின் கல்வி மற்றும் அவர்களுக்கு தினமும் இருவேளை உணவு வழங்கவும் இந்தத் தொகை பயன்படுத்தப்படுவதாக இயக்குநர் பிரவீன் தார்டே தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading