சூர்யாவின் கல்வி தொடர்பான சேவைகள் எனக்கு ஊக்கமும் உத்வேகமும் அளிக்கின்றன… சிரஞ்சீவி நெகிழ்ச்சி!

நடிகர் சிரஞ்சீவி, தெலுங்கு புத்தாண்டான யுகாதி தினத்தை முன்னிட்டு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், தனது சமூக சேவைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து பகிர்ந்துள்ளார். ரத்த தானம் மற்றும் கண் தானம் போன்ற செயல்களின் மூலம் லட்சக்கணக்கான மக்களுக்கு உதவி செய்து வருவதாகவும், மக்களின் அன்பால் தான் உயர்ந்த நிலையில் வந்ததால் அவர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த சேவைகளைத் தொடங்கியதாகவும் அவர் கூறினார்.

மேலும், ஏழை மாணவர்களுக்கு இலவசமாக தரமான கல்வி வழங்குவது தான் தனது அடுத்த இலக்காக இருப்பதாக தெரிவித்துள்ளார். நல்ல கல்வி கிடைத்தால் ஏழை குடும்பங்களின் வாழ்க்கை முன்னேறும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.

இந்த நிலையில், நடிகர் சூர்யா தன்னை முன்மாதிரியாகக் கொண்டு ‘அகரம்’ அறக்கட்டளையைத் தொடங்கியதை நினைவுகூர்ந்த அவர், தற்போது சூர்யாவின் கல்வி தொடர்பான சேவைகள் தான் தமக்கு ஊக்கமும் உத்வேகமும் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading