தமிழில் ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘வாயை மூடி பேசவும்’, ‘மாரி’, ‘மாரி 2’ போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் பாலாஜி மோகன் தற்போது ‘லவ்’ என்ற புதிய படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. அவரது அடுத்த பட அறிவிப்பை எதிர்பார்த்து தமிழ் ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்தனர்.
இந்த நிலையில், பாலாஜி மோகன் தனது அடுத்த படத்தை ஹிந்தியில் இயக்க உள்ளார். இதன் மூலம் அவர் பாலிவுட் திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகிறார்.
இயக்குனர் ஆனந்த் எல் ராய் தலைமையிலான கலர் எல்லோ புரொடக்ஷன்ஸ் மற்றும் அமேசான் எம்ஜிஎம் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு ‘நையி நாவீலி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அமேசான் ஓடிடி நடத்திய நிகழ்ச்சியில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இப்படத்தில் யாமி கவுதம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் இணைந்துள்ளார்.
