Advertisement

மலையாள சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகும் யோகி பாபு?

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘ஆதார்’ திரைப்படம் விமர்சகர்களிடமும் ரசிகர்களிடமும் பரவலான பாராட்டுகளை பெற்றது. ராம்நாத் பழனிகுமார் இயக்கிய இந்த படத்தில் கருணாஸ், அருண் பாண்டியன், ரித்விகா, இனியா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஒரு சாதாரண மனிதன் தனது அடையாளத்தை நிலைநிறுத்திக்கொள்ள போராடும் கதையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இதில் கருணாஸ் ஒரு எளிய மனிதனாக தனது இயல்பான நடிப்பால் கவனம் பெற்றார்.

தற்போது இந்த படம் மலையாளத்தில் ரீமேக் செய்யப்படுகிறது. தமிழில் கருணாஸ் நடித்த முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள பதிப்பில் யோகி பாபு நடிக்கிறார். இதன் மூலம் யோகி பாபு மலையாள சினிமாவில் முதன்மை கதாநாயகனாக அறிமுகமாகிறார். தமிழில் இந்த படத்தை இயக்கிய ராம்நாத் பழனிகுமார் மலையாளத்திலும் இதையே இயக்குகிறார். மேலும், மலையாள பதிப்பிற்கும் ‘ஆதார்’ என்றே தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இயக்குனர் ராம்நாத் பழனிகுமார் கூறுகையில், 2022ஆம் ஆண்டு ‘பொன்னியின் செல்வன்’ வெளியான நேரத்தில் வெளியானாலும், ‘ஆதார்’ திரைப்படம் ஊடகங்கள், விமர்சகர்கள், திரைப்படத் துறை மற்றும் ரசிகர்கள் மத்தியில் தனித்த கவனத்தை ஈர்த்து பாராட்டுகளை பெற்றது. தற்போது இந்த படத்தை யோகி பாபு முதன்மை வேடத்தில் மலையாளத்தில் இயக்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். தரமான திரைப்படங்களை மதிக்கும் மலையாள ரசிகர்கள் ‘ஆதார்’ படத்தையும் வரவேற்பார்கள் என நம்புகிறேன் என்றார்.

Add a Comment

Leave a Reply