ஆதித்ய தர் இயக்கத்தில், ரன்வீர் சிங் நாயகனாக நடித்து நேற்று வெளியான படம் ‘துரந்தர் த ரிவெஞ்ச்’. கடந்த ஆண்டு வெளியான ‘துரந்தர்’ படத்தின் இரண்டாம் பாகமாக இப்படம் வெளியாகி உள்ளது.பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படத்தின் பிரிமியர் காட்சிகள் நேற்று முன்தினம் நடைபெற்றன. பல இடங்களில் படத்தின் காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. நேற்று ஹிந்தி தவிர மற்ற மாநில மொழிகளில் படம் வெளியாகவில்லை. இருப்பினும் ஹிந்திப் பதிப்பிற்கான வரவேற்பு அமோகமாக இருந்தது.இந்தியாவில் மொத்தம் 170 கோடி, வெளிநாடுகளில் 60 கோடி என மொத்தம் 230 கோடி வசூலைக் கடந்திருக்கலாம் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Add a Comment
