நடிகர் ரன்வீர் சிங் நடித்துள்ள துரந்தர் 2 திரைப்படம் நாளை (மார்ச் 19) உலகளவில் பிரம்மாண்டமாகத் திரைக்கு வருகிறது. முதல் பாகம் ஏற்படுத்திய அதிர்வால் இரண்டாம் பாகமான துரந்தர் தி ரிவென்ச் படத்திற்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதேநேரம், இந்தியளவில் பல திரையரங்கங்களில் இப்படத்திற்கான சிறப்பு திரையிடல் இன்று மாலை துவங்குகிறது.ஹிந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் சிறப்பு காட்சி இருக்கும் என அறிவிக்கப்பட்டு அதற்கான டிக்கெட் முன்பதிவுகளும் விறுவிறுப்பாக நடைபெற்றன.இந்த நிலையில், ஹிந்தி தவிர பிறமொழிகளுக்கான வடிவம் கிடைக்காததால் தமிழ், தெலுங்கு உள்பட மொழிகளின் சிறப்பு திரையிடலை ரத்து செய்துள்ளனர்.
Add a Comment
