ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண் ஒளிப்பதிவாளர் என்ற பெருமையை பெற்றார் ஆட்டம் டுரால்ட் அர்காபாவ் !

98வது ஆஸ்கர் விருது விழாவில் ‘சின்னர்ஸ்’ திரைப்படம் அதிகமான விருதுகளைப் பெறும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. மொத்தம் 16 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டிருந்த இந்த திரைப்படம், இறுதியில் சிறந்த நடிகர், சிறந்த ஒரிஜினல் திரைக்கதை, சிறந்த இசை மற்றும் சிறந்த ஒளிப்பதிவு ஆகிய நான்கு முக்கிய பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது.


இந்த விழாவில் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை Autumn Durald Arkapaw பெற்றுள்ளார். இந்த சாதனையின் மூலம், ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண் ஒளிப்பதிவாளர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விருது பெற்ற பிறகு அவர் பேசும்போது, “பெண்களுக்காக நான் ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். பெண்களாகிய நீங்கள் ஒருவருக்கொருவர் துணையாக இருந்து ஆதரவு அளிக்க வேண்டும். அந்த ஆதரவு இல்லாமல் இத்தகைய தருணங்கள் சாத்தியமில்லை. இதற்காக உங்களுக்கு மனமார்ந்த நன்றி. இந்த சாதனையை அடைய ஒரு பெரிய குழுவின் உழைப்பு அவசியம் என்பதை நான் கடந்த சில மாதங்களில் கற்றுக்கொண்டேன். ஆனால் இது இனி என்னைப் பற்றியது மட்டுமல்ல; இதை விட பெரிய பொருள் கொண்ட ஒன்று. பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் ஒரு முன்மாதிரியாக இந்த விருதை வெல்ல வேண்டும் என்றே நான் விரும்பினேன்” என்று தெரிவித்துள்ளார்.


Autumn Durald Arkapaw கலிபோர்னியாவில் பிறந்தவர். அவருடைய பூர்வீகம் பிலிப்பைன்ஸ் நாடு ஆகும். பிலிப்பைன்ஸ் நாடு ஜப்பான் ஆக்கிரமித்த காலத்தில் அவரது குடும்பம் கலிபோர்னியாவிற்கு குடிபெயர்ந்தது. தனது தாத்தாவின் பராமரிப்பில் வளர்ந்த அவர், முதலில் தொலைக்காட்சி தொடர்களில் பணியாற்றுவதற்காக ஒளிப்பதிவை கற்றுக்கொண்டார். அதன் பின்னர் தனது திறமையை வெளிப்படுத்தி சினிமா உலகில் முன்னணி ஒளிப்பதிவாளராக உயர்ந்தார்.


அவர் பணியாற்றிய முக்கியமான படைப்புகளில் Loki, Black Panther: Wakanda Forever ஆகியவை அடங்கும். மேலும், ஐமேக்ஸ் திரைப்பட கேமராவின் உயர்தர வடிவத்தை பயன்படுத்திய முதல் பெண் ஒளிப்பதிவாளர் என்ற சாதனையும் இவருக்கு உண்டு. தற்போது ஆஸ்கர் விருது பெற்றுள்ள இவருக்கு உலகம் முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading