தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகராகத் திகழும் சூர்யா, தற்போது ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இதனைத் தொடர்ந்து, ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவான ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படத்திலும் சூர்யா நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் ஜூன் மாத வெளியாகும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர், ‘ஆவேசம்’ திரைப்படத்தின் இயக்குநரான ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படத்தில் சூர்யா காவல்துறை அதிகாரி வேடத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படமும் இந்த ஆண்டுக்குள் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை இயக்கிய எச். வினோத் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியானதும் எச். வினோத் இந்த புதிய படத்தின் பணிகளைத் தொடங்குவார் என கூறப்படுகிறது. தொடர்ந்து முன்னணி இயக்குநர்களுடன் சூர்யா இணைந்து பணியாற்றுவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
