இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துவருகிறார். இந்த திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் பல்வேறு வகையான கார்களை நசுக்கி, உடைக்கும் திறன் கொண்ட பிரமாண்ட இயந்திரங்கள் அமைந்துள்ள மிகப்பெரிய தொழிற்சாலை சண்டிகரில் அமைந்துள்ளது.
அத்தகைய தொழிற்சாலையில்தான் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்திற்கான முக்கியமான காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன என்ற தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, ரஜினிகாந்த் மற்றும் ஷாருக் கான் இணைந்து நடிக்கும் அதிரடியான காட்சிகளை இயக்குநர் நெல்சன் மிகுந்த சிறப்பாக வடிவமைத்து வருகிறார் என கூறப்படுகிறது. முதன்முறையாக இந்த இரு முன்னணி நடிகர்கள் ஒன்றாக திரையில் தோன்றும் இந்த காட்சிகள், திரைப்படத்தின் முக்கிய அம்சமாகப் பேசப்படும் வகையில் உருவாக்கப்பட்டு வருகின்றன என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், முதலில் ‘ஆர்.கே மற்றும் கே.எச்’ என்ற வரிசையில் தலைப்பை தயாரித்து ரஜினிகாந்திடம் நெல்சன் காட்டியதாக கூறப்படுகிறது. அதைப் பார்த்த ரஜினிகாந்த் சற்று தயக்கமடைந்ததாகவும், பின்னர் தனது கையால் ‘கே.எச் மற்றும் ஆர்.கே’ என மாற்றி எழுதியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணையும் திரைப்படம் உருவாகும் என்ற சாத்தியம், தென்னிந்தியாவை மட்டுமின்றி இந்திய அளவிலும் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
