‘பேட்ரியாட்’ படத்தின் டப்பிங்-ஐ நிறைவு செய்த மம்முட்டி!

மலையாளத் திரையுலகில் சிறிய இடைவெளிக்குப் பிறகு உருவாகி வரும் மல்டி ஸ்டார் திரைப்படம் ‘பேட்ரியாட்’ ஆகும். இந்த திரைப்படத்தில் மோகன்லால், மம்முட்டி, பஹத் பாசில், குஞ்சாக்கோ போபன், நயன்தாரா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘விஸ்வரூபம்’ திரைப்படத்தின் எடிட்டராக பணியாற்றியதுடன், ‘டேக் ஆப்’, ‘மாலிக்’ போன்ற படங்களை இயக்கிய மகேஷ் நாராயணன் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து, வரும் ஏப்ரல் 23ஆம் தேதி வெளியாகும் என முன்பே அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், நடிகர் மம்முட்டி தனது கதாபாத்திரத்திற்கான டப்பிங் பணிகளை சமீபத்தில் முடித்துள்ளார். இந்த டப்பிங் பணிகள் சென்னையில் அமைந்துள்ள நடிகை லிசிக்கு சொந்தமான லீ மேஜிக் லண்டன் ஸ்டுடியோவில் நடைபெற்றது. டப்பிங் பணியின் போது, நடிகை லிசி மற்றும் அவரது முன்னாள் கணவரும் இயக்குநருமான பிரியதர்ஷன் ஆகியோருடன் மம்முட்டி சந்தித்த புகைப்படத்தை லிசி தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading