ரன்வீர் சிங் மற்றும் சாரா அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘துரந்தர்’ திரைப்படம் பெரிய வரவேற்பைப் பெற்ற நிலையில், அதன் தொடர்ச்சியாக உருவாகியுள்ள ‘துரந்தர் தி ரிவெஞ்ச்’ படத்தை இயக்குனர் ஆதித்யா தார் இயக்கியுள்ளார். ‘துரந்தர் தி ரிவெஞ்ச்’ திரைப்படம் முன்பதிவிலும் புதிய வரலாறு படைத்து வருகிறது. அதாவது, படம் வெளியாகும் முன்பே ரூ.120 கோடி வசூலை முன்பதிவாக பெற்றுள்ளது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் இந்தியாவில் தலா ரூ.60 கோடி மதிப்பிலான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், 24 மணி நேரத்திற்குள் ஒரு லட்சம் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ள நிலையில், படம் வெளியாகிய பிறகு மிகப்பெரிய வசூல் சாதனை படைக்கும் என திரையுலக வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.
Add a Comment
