எதிர்நீச்சல் 2 சீரியலில் என்ட்ரி கொடுக்கும் நடிகை ஸ்ரீஜா!

ரசிகர்களின் வரவேற்பை பெற்ற ‘எதிர்நீச்சல்’ தொடரின் 2ம் சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனில் நடிகர் மாரிமுத்து கேரக்டருக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்த நிலையில் திடீரென அவர் மரணமடைய, ஆதி குணசேகரன் என்ற அந்த கேரக்டருக்கு நடிகரும் எழுத்தாளருமான வேல ராமமூர்த்தி வந்தார். இவரது மனைவியாக நடித்து வந்தார் நடிகை கனிகா. ஒரு கட்டத்தில் அவர் விலகி விட்டார்.இந்த நிலையில் கனிகா நடித்து வந்த ஈஸ்வரி கேரக்டரில் ஸ்ரீஜா நடித்து வருகிறார். ‘பொம்மலாட்டம்’ உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தவர் இவர். இவர் நடித்த எபிசோட்கள் வரும் வாரங்களில் இருந்து ஒளிபரப்பாக இருக்கிறது. கனிகா இடத்தை ஸ்ரீஜா பிடிப்பாரா என்பது இன்னும் ஒரு சில வாரங்களில் தெரிந்து விடும்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading