நடிகை ரித்திகா நாயக் தற்போது தெலுங்கு திரையுலகில் வேகமாக முன்னேறி வரும் நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார். ‘அசோக வனமுலு அர்ஜுன கல்யாணம்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அவர், அதன் பின்னர் நானி நடித்த ‘ஹாய் நன்னா’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே மேலும் பிரபலமானார். தொடர்ந்து தேஜா சஜ்ஜா மற்றும் மஞ்சு மனோஜ் நடித்த ‘மிராய்’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் முழுமையான வணிக நாயகியாக கவனம் பெற்றார்.
இந்த நிலையில் தற்போது நடிகர் நிதினுக்கு ஜோடியாக புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தை தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களான சித்தாரா என்டர்டெயின்மென்ட் மற்றும் பார்ச்சூன் போர் சினிமாஸ் இணைந்து தயாரிக்கின்றன. சமீபத்தில் இப்படத்தின் பூஜை எளிமையாக நடைபெற்றது.
மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வரும் ரித்திகா நாயக், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகை இடத்தை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறார் என்று திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
