ஈரோட்டில் தொழிலாளர்களுடன் ஜேசன் சஞ்சய்… வைரலாகும் புகைப்படம்!

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தற்போது தனது முதல் திரைப்படத்தை இயக்கி வருகிறார். வெளிநாட்டில் தனது கல்வியை முடித்த அவர் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகிறார்.

‘சிக்மா’ என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் நாயகனாக நடிக்கிறார். மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். ஆக்சன் திரைப்படமாக உருவாகி வரும் இந்த படத்தின் கடைசிக் கட்ட பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஜேசன் சஞ்சய் பொதுமக்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.  ரசிகர்கள் மத்தியில் அவரது சிக்மா திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading