2025ஆம் ஆண்டிற்கான ‘Gaddar’ திரைப்பட விருதுகளை அறிவித்த தெலங்கானா மாநில அரசு!

2025ஆம் ஆண்டிற்கான கட்டார் விருதுகளை தெலங்கானா மாநில அரசு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தெலுங்கு திரைப்படத் துறையில் சிறந்து விளங்கிய கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களை கௌரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா வரும் மார்ச் 19ஆம் தேதி தெலுங்கு புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நடைபெற உள்ளது. இந்த விழாவில் பல்வேறு பிரிவுகளில் சிறந்த சாதனை படைத்த கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன.

• என்டிஆர் விருது – சிரஞ்சீவி

• பைடி ஜெய்ராஜ் விருது – கமல்ஹாசன்

• நாகிரெட்டி சக்ரபாணி விருது – அஷ்வினி தத்

• ஏஎன்ஆர் விருது – ஜெயசுதா

சிறந்த திரைப்படங்கள்:

• சிறந்த படம் – ராஜு வெட்ஸ் ராம்பாய்

• சிறந்த படம் (2வது இடம்) – தண்டோரா

• சிறந்த படம் (3வது இடம்) – தி ப்ரி வெட்டிங் ஷோ

• சிறந்த தேசிய ஒற்றுமைப் படம் – தண்டேல்

• சிறந்த சுற்றுச்சூழல் படம் – இக்வா

• சிறந்த அறிமுகப் படம் – லிட்டில் ஹார்ட்ஸ்

• சிறந்த பிரபல பொழுதுபோக்கு படம் – சங்கராந்திகி வஸ்துனம்

• சிறந்த சமூகக் கருத்து படம் – கோர்ட்

• சிறந்த ஸ்பெஷல் எபக்ட்ஸ் படம் – மிராய்

• சிறந்த குழந்தைகள் படம் – அனகனகா

சிறந்த நடிகர்/நடிகை

• சிறந்த நடிகர் – நாக சைதன்யா (தண்டேல்)

• சிறந்த நடிகை – ராஷ்மிகா மந்தனா (தி கேர்ள்பிரண்டு)

• சிறந்த இயக்குனர் – சைலு (ராஜு வெட்ஸ் ராம்பாய்)

• சிறந்த துணை நடிகர் – சிவாஜி

• சிறந்த துணை நடிகை – பூமிகா

_____

• சிறந்த இசையமைப்பாளர் – மார்க் கே ராபின் (தண்டோரா)

• சிறந்த பின்னணிப் பாடகர் – அனுராக் (ராஜு வெட்ஸ் ராம்பாய்)

• சிறந்த பின்னணி பாடகி – சஹிதி சகண்டி (கண்ணப்பா)

• சிறந்த நகைச்சுவை நடிகர் – கிருஷ்ணா தேஜா (ஜிக்ரிஸ்)

• சிறந்த குழந்தை நட்சத்திரம் – ரோஹன் ராய் (தி ப்ரி வெட்டிங் ஷோ)

• சிறந்த கதையாசிரியர் – குணசேகர் (யுபோரியா)

• சிறந்த திரைக்கதை ஆசிரியர் – அனில் ரவிப்புடி

• சிறந்த பாடலாசிரியர் – நந்தகிஷோர் (குபேரா)

• சிறந்த ஒளிப்பதிவாளர் – கார்த்திக் கட்டமனேனி (மிராய்)

• சிறந்த எடிட்டர் – ஸ்ரீகர் பிரசாத் (மிராய்)

• சிறந்த ஒலிப்பதிவாளர் – எம்ஆர் ராதாகிருஷ்ணன் (கிஷ்கிந்தாபுரி)

• சிறந்த நடனம் – கிரா கிரா கிரா (சாம்பியன்)

• சிறந்த கலை இயக்குனர் – தோட்டா தரணி (சாம்பியன்)

• சிறந்த மேக்கப் கலைஞர் – கோவிந்த் (அகாண்டா 2)

• சிறந்த ஆடை வடிவமைப்பாளர் – சந்திரகாந்த் (சாம்பியன்)

சிறப்பு நடுவர் விருதுகள்:

• சிறந்த படம் – 23

• சிறந்த நடிகர் – சைட்டு ஜொன்னலகட்டா (ராஜு வெட்ஸ் ராம்பாய்)

• சிறந்த நடிகை – அனந்திகா (8 வசந்தலு)

• சிறப்பு நடுவர் நாயகன் – ரோஷன் (சாம்பியன்)

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading