‘கொலைச்சேவல்’ படத்தின் டிரெய்லர்-ஐ வெளியிட்ட இயக்குனர் பா.ரஞ்சித்!

கலையரசன் மற்றும் தீபா பாலு முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் ‘கொலைச்சேவல்’. இந்த படத்தில் பால சரவணன், அகரன் வெங்கட், ஆதவன், கஜராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பி.ஜி. முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு சாந்தன் இசையமைத்துள்ளார்.

ஆர்.பி. பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி. பாலா தயாரித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் வி.ஆர். துதிவாணன் இயக்கியுள்ளார். ஜவ்வாது மலைப் பின்னணியில் உருவாகியுள்ள இந்த காதல் திரைப்படம், சமூகத்திற்கு தேவையான ஒரு முக்கியமான கருத்தை பேசும் படமாக உருவாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் இந்த படம் வரும் 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் இமையம் எழுதிய ‘கொலைச்சேவல்’ கதைக்கும் இந்த திரைப்படத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், கதைக்குப் பொருத்தமான தலைப்பாக இருந்ததால் அவரிடம் அனுமதி பெற்று இந்த பெயர் பயன்படுத்தப்பட்டதாக தயாரிப்பாளர் ஆர்.பி. பாலா தெரிவித்துள்ளார். இந்நிலையில் ‘கொலைச்சேவல்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த டிரெய்லரை இயக்குநர் பா. ரஞ்சித் வெளியிட்டுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading