இயக்குநர் ஏ.எல். விஜய் சமீபத்தில் அளித்த பேட்டியில், நல்லவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்பதையே தன்னுடைய கருத்தாக தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றும் கூறினார். இது ஒரு ஜனநாயக நாடு என்பதால், அவரைப் போன்ற நல்ல ஆளுமையும் மனிதநேயமும் கொண்டவர்கள் அரசியலில் இருந்தால் அது மக்களுக்கு நன்மை தரும் என்று நம்புகிறேன். அவரது வருகையால் அரசியலிலும் நல்ல மாற்றங்கள் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பும் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
அதேபோல், ‘தலைவா’ திரைப்படம் குறித்து பேசும்போது அது ஒரு அரசியல் படம் அல்ல என்று விளக்கமளித்தார். அந்தக் கதையில் சத்யராஜ் கதாபாத்திரத்திற்கு ஒரு பெரிய சாம்ராஜ்யம் இருக்கும். அதன் பின்னர் அந்த இடத்திற்கு அவரது மகன் வருகிறார். அந்த மக்களுக்கு அவர் ஒரு தலைவனாக உருவாகிறார் என்பதே கதையின் மையமாகும்.
அதனால் அந்த திரைப்படத்தை அரசியல் படமாக பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறினார். ஆனால் அது எப்படிப் அரசியல் படமாக பார்க்கப்பட்டது என்பது புரியவில்லை எனவும் தெரிவித்தார். மேலும் நடிகர் விஜயுடன் பணியாற்றிய அனுபவம் மிகவும் சிறப்பானதாக இருந்தது என்றும் கூறினார்.
