‘ஜனநாயகன்’ படத்திற்கு விரைவில் தணிக்கை சான்றிதழ்? வெளியான புது அப்டேட்!

வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’ குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், பிரியாமணி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த திரைப்படம் கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தணிக்கை தொடர்பான பிரச்சினை காரணமாக படம் வெளியீடு தாமதமாகி, அந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றதால் திட்டமிட்ட தேதியில் படம் வெளியாகவில்லை.

பின்னர் தயாரிப்பு நிறுவனம் அந்த வழக்கை திரும்பப் பெற்று, கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி திரைப்படத்தை ரிவைசிங் தணிக்கை குழுவிற்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. இதன் பின்னர் தயாரிப்பு நிறுவனத்திற்கு ரிவைசிங் குழுவிலிருந்து மின்னஞ்சல் வந்துள்ளதாகவும், அதில் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை ரிவைசிங் தணிக்கை குழு படத்தை பார்க்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் அடுத்த வாரத்தில் இந்த திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. எனினும் தணிக்கை சான்றிதழ் கிடைத்தாலும், தேர்தல் முடிந்த பின்பே திரைப்படத்தை வெளியிட வேண்டும் என்ற முடிவில் படக்குழு இருப்பதாக கூறப்படுகிறது. தேர்தல் நிறைவடைந்த அடுத்தடுத்த வாரங்களில் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரைக்கு வரும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading