தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஓம்’ படத்தில் நடித்து முடித்துள்ள ஸ்ரீலீலா, ரஜினிகாந்தின் ‘தர்மன்’, அஜித்தின் ‘டேர் டெவில்’ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். பாலிவுட்டில் கார்த்திக் ஆர்யனுக்கு ஜோடியாக அறிமுகமாகும் படத்தில் நடித்து வரும் அவர், மேலும் ஒரு இந்திப் படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது திரைப்பயணத்தின் தொடக்கத்தில் படங்களைத் தேர்வு செய்ததில் சில தவறுகள் செய்ததாக ஸ்ரீலீலா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “இளம் வயதில் எனது திரைப்பயணத்தில் சில தவறான முடிவுகளை எடுத்துவிட்டேன். என்னைத் தேடி வந்த எல்லாப் படங்களிலும் ஒப்பந்தமானேன். இப்போது நினைத்துப் பார்க்கும்போது, இன்னும் கவனமாகப் படங்களைத் தேர்வு செய்திருக்க வேண்டும் என்றும், சில வாய்ப்புகளைத் தவிர்த்திருக்க வேண்டும் என்றும் தோன்றுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
